பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்!!

தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனி ஒரு ஹீரோவாக நடித்து அதிக வசூலை எடுத்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்துள்ளார்.
அந்தவகையில், நயன்தாராவின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது, அந்தவகையில், கோலமாவு கோகிலா ரூ 5 கோடி வரை சென்னையில் வசூல் செய்துவிட்டது.
அதேபோல் இமைக்கா நொடிகள் 3 நாட்களில் ரூ 1.4 கோடிகள் வரை சென்னையில் மட்டுமே வசூல் செய்துவிட்டது.
மேலும், நேற்று தமிழகம் முழுவதும் 70% திரையரங்குகளில் நயன்தாரா படங்கள் திரையிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.