தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அட.. இப்படி ஆகிருச்சே! நயன்தாராவின் இடத்தை பிடித்த பிரபல நடிகை! அதுவும் எந்த முன்னணி ஹீரோவுடன் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜாராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதனை தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக முன்னேறினார். இந்த நிலையில் அடுத்ததாக அட்லீ பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார்.
அதாவது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை ஹீரோவாக வைத்து படத்தை இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் ஷாருக்கானால் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் படப்பிடிப்பு மிகவும் தாமதமாகி வருவதால் கால்ஷீட் பிரச்சினையின் காரணமாக நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாராவிற்கு பதில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.