ஜொலிஜொலிக்கும் குட்டையான உடையில், காதலருடன் நெருக்கமாக நியூ இயர் கொண்டாடும் நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

ஜொலிஜொலிக்கும் குட்டையான உடையில், காதலருடன் நெருக்கமாக நியூ இயர் கொண்டாடும் நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!


nayanthara-new-year-celebration-photo-viral

தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அன்றில் இருந்து இன்று வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

மேலும் அம்மனாக நடித்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த  போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் தனது காதலர் விக்னேஷ்சிவனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என பிசியாக உள்ளார். மேலும் அண்மையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். 

அதனை தொடர்ந்து இருவரும் தற்போது புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். குட்டையான ஜொலிஜொலிக்கும் உடையில் நயன்தாரா விக்னேஷ்சிவனுடன் நெருக்கமாக இருந்த அந்த ரொமான்டிக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.