சினிமா

விஸ்வாசம் படத்தில் இதுவரை வெளிவராத நயன்தாராவின் கலக்கல் புகைப்படங்கள்

Summary:

nayanthara new photos from viswasam

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து 4-வது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார் சிவா. 

அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களும் நிறைந்துள்ளது. மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் இது என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், சுமைகளை அவர்கள் மேல் சுமத்தாமல் எப்படி காக்க வேண்டும் என இயக்குனர் தெளிவாக தெரிவித்துள்ளார். படத்தில் அஜித்தின் மனைவியாக ஒரு குழந்தைக்கு தாயாக நயன்தாரா நடிப்பில் தனது முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நயன்தாராவும் அஜித்தும் இணைந்து தோன்றும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நயன்தாரா படத்தில் தோன்றும் காட்சிகளின் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement