சென்னையில் வெள்ள பாதிப்பின் போது நயன்தாரா செய்த செயல்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

சென்னையில் வெள்ள பாதிப்பின் போது நயன்தாரா செய்த செயல்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!


Nayanthara gave napkin for affected peoples in chennai flood

தமிழ் திரைத்துறையில் பிரபலமானவராக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் முதன்முதலில் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை பெற்றுள்ளார்.

chennai

இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா பல பிசினஸ்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்றாக பெண்களுக்கான நாப்கின்களை விற்கும் கம்பெனியை சமீபத்தில் தொடங்கினார்.

இதனை அடுத்து தற்போது சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதற்கு பல திரை பிரபலங்களும் உணவு, உடை, பணம்,  போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். 

chennai

மேலும் நடிகை நயன்தாராவும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, வாட்டர் பாட்டில்கள் மற்றும் பெண்களுக்கான நாப்கின்களை வழங்கியிருக்கிறார். இதன் படி நயன்தாரா தயாரிக்கும் femi9 கம்பெனி நாப்கின்களை வழங்கி இருப்பதால் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் இந்த நேரத்திலும் உங்களுக்கு விளம்பரம் தேவையா என்று திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.