அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அட..இதை கவனிச்சிங்களா! அப்போ எல்லாம் நடிப்பா!! கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா! குழம்பிப்போன நெட்டிசன்கள்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் 2ஆம் அலையாக தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட திரைபிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் வருகின்றனர் .
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் . இந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நர்ஸ் கையில் ஊசியே இல்லையே? அப்பறம் எப்படி நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நயன்தாரா ஊசி போடுவதுபோல போட்டோ மட்டும்தான் எடுத்து கொண்டாரா? எனவும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இது சர்ச்சையாகியுள்ளது.