சினிமா

நான் ஒரு போதும் அதில் மட்டும் கலந்து கொள்ளவே மாட்டேன்! அதிரடியான கண்டிஷனை போடும் நயன்தாரா!

Summary:

Nayanthara

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . 

அவரது நடிப்பில் உருவாகி, தீபாவளியை முன்னிட்டு பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்திருந்தார். அப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும் தற்போது ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து நயன்தாரா  மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது அதிரடியான கண்டிஷன் ஒன்றை கூறியுள்ளார். அதாவது படத்தின் ப்ரோமோஷன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் நான் ஒரு போதும் கலந்துக்கொள்ள மாட்டேன், என அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டு தான் படப்பிடிப்பிற்கே நயன்தாரா செல்வதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Advertisement--!>