சினிமா

ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா! வெளியான புதிய தகவல்.

Summary:

Nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமின்றி நடிகைகளுக்கு எல்லாம் டப் கொடுக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் மற்ற நடிகைகளை காட்டிலும் இவர் தான் அதிக சம்பளம் வாங்க கூடியவர். ஆனால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அதிகம் சம்பளம் கொடுத்தாவது நயன்தாராவை தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்கு நயன்தாராவுக்கு 5.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு தர்பார் படத்தை விட சற்று குறைவாக 4.5 கோடி சம்பளமாக தரப்படுகிறது என்ற பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement