திடீரென்று மூத்த பத்திரிக்கையாளர் காலில் விழுந்த நயன்தாரா.. அதிர்ச்சியான பத்திரிக்கையாளர் குழு.?

திடீரென்று மூத்த பத்திரிக்கையாளர் காலில் விழுந்த நயன்தாரா.. அதிர்ச்சியான பத்திரிக்கையாளர் குழு.?


nayantara-suddenly-fell-on-the-journalists-feet

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழில் பல வெற்றி படங்களை குடுத்து தமிழ் ரசிகர்களிடம் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவில் முந்தைய நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதைகள் உருவாகின.

நயன்தாரா

இந்த நிலையை மாற்றி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளத்தில் நடிக்க தொடங்கி தமிழ் சினிமாவின் புது அத்தியாயத்தை உருவாக்கியவர் நயன்தாரா என்றால் அது மிகையாகாது. நயன்தாராவின் வழியிலேயே தொடர்ந்து பல்வேறு நடிகைகள் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாடகைத்தாய் முறை மூலம் இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நயன்தாரா

அத்தகைய நிலையில் நயன்தாரா, அவர் நடித்த ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மூத்த பத்திரிக்கையாளர் ஒருவரின் காலில் விழுந்து நன்றி கூறியிருக்கிறார். நயன்தாரா முதன் முதலில் நடித்த ஐயா படம் வெளியான போது நயன்தாராவை பற்றி நல்ல விதமாக பத்திரிக்கையில் எழுதினாராம். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது