சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
"நானி பட ப்ரமோஷனில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் அந்தரங்க புகைப்படங்கள்!" பார்வையாளர்கள் அதிர்ச்சி!
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. இவர் உதவி இயக்குனராகவும், நடிகராகவும், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இதையடுத்து 2008ம் ஆண்டு "அஷ்டசம்மா" திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நானி, தமிழில் 2011ம் ஆண்டு "வெப்பம்" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நான் ஈ, ஆஹா கல்யாணம், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நானி நடித்துள்ள திரைப்படம் "ஹாய் நன்னா".
மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா மாலத்தீவில் சுற்றுலா மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் ஒளிபரப்பாகின.

இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமீபத்தில் இதுகுறித்து பேட்டியளித்த நானி, "இவர்களது புகைப்படங்கள் ஒளிபரப்பானது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. இதற்காக யாருக்கேனும் வருத்தமோ, சங்கடமோ ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.