சினிமா வீடியோ

அண்ணன் தங்கை செண்டிமென்டில் பார்ப்போரை உருகவைத்த நம்மவீட்டு பிள்ளை பட ட்ரைலர்.! செம குஷியில் ரசிகர்கள்!!

Summary:

nammaveetu pillai trailer leaked

மிஸ்டர் லோக்கல் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயனின் 16 வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் மற்றும் அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

 மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

மேலும் படம் வெளியிடுவதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  அதனை தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.

இந்நிலையில் தற்போது அண்ணன் தங்கை சென்டிமென்டில் அனைவரையும் உருகவைக்கும் நம்ம வீட்டு பிள்ளையின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Advertisement