சினிமா

படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! புதிய அதிரடி அவதாரமெடுத்த நடிகை நமீதா!

Summary:

நடிகை நமீதா சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். 

அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நடிகை நமீதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பாஜக கட்சியில் இணைந்து  செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது நமீதா சினிமா தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்த திரைப்படம்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சத்தில் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தில் நமீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து படத்தின் தலைப்பை வருகிற 26-ந்தேதி நமீதா வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


Advertisement