சினிமா

நாகினி சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்! மாப்பிள்ளை இவர்தான்! தீயாய் பரவும் தகவல்!!

Summary:

நாகினி சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்! மாப்பிள்ளை இவர்தான்! தீயாய் பரவும் தகவல்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற தொடர் நாகினி. இந்தத் தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் ஏராளமான ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மௌனி ராய் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் தற்போது துபாயில் வசித்து வருகிறாராம். கொரோனா காலத்தில்கூட அவருடன் வசித்து வந்ததாக மௌனி ராய் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேலும் அவருடன் பல பார்ட்டிகளில் கலந்துகொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்தது.

இந்நிலையில் நடிகை மௌனி ராய் தனது நீண்டநாள் காதலரான சூரஜ்  நம்பியாரை வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளி வருகிறது. மேலும் திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெறும் எனவும், திருமண வரவேற்பு விழா மௌனி ராயின் சொந்த ஊரான பாட்னாவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement