மறைந்த தனது தந்தையின் பிறந்தநாளன்று, கண்கலங்க வைக்கும் உருக்கமான கவிதையை வெளியிட்ட நா.முத்துக்குமாரின் மகன்!

மறைந்த தனது தந்தையின் பிறந்தநாளன்று, கண்கலங்க வைக்கும் உருக்கமான கவிதையை வெளியிட்ட நா.முத்துக்குமாரின் மகன்!


na-muthukumar-son-create-poet-for-his-father

தமிழ்சினிமாவில் பாடலாசிரியர்கள் வரிசையில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி நீங்கா இடம் பிடித்தவர் நா முத்துக்குமார். பாலுமகேந்திராவின் உதவியாளராக பணியாற்றிய அவர் வீரநடை என்ற படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியரானார். அதனை தொடர்ந்து அவர் 92 க்கும் மேற்பட்ட படங்களில், 1400க்கும் மேற்பட்ட  பாடல்களுக்கு மேல் அழகிய பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் தங்கமீன்கள் படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் மற்றும் சைவம் படத்தில் அழகே அழகு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, தேசிய விருதுகளையும் பெற்றது.

இந்த நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பல நாட்கள் அவதிப்பட்டு வந்த அவர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று நா.முத்துக்குமாருக்கு பிறந்தநாள். அதனை முன்னிட்டு பல பிரபலங்களும், ரசிகர்களும் அதனை நினைவுக்கூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்த நிலையில் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் தனது தந்தை குறித்த கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

Na muthukumar

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்!

என் தந்தையின் பாடல்கள் சொக்கத்தங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்!

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து!

என் தந்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்!

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா!

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள்தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா?

- மழலைக் கவிஞர் ஆதவன் முத்துக்குமார்

இந்த கவிதை வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் கண்கலக்கியுள்ளனர்.