சினிமா

என் உயிருக்கு ஆபத்து... முதல்வர் அய்யா உதவ வேண்டும்.. பிரபல இயக்குனரின் பரபரப்பு ட்வீட்.!

Summary:

பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமியின் ட்விட்டர் பதிவு.

தமிழ் சினிமாவில் கூடல் நகர் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன்பின் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுக செய்த பெருமையும் இவருக்கு உண்டு.

இவர் இயக்கிய நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ட்வீட்டர் பதிவில் “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்” என பரபரப்பு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.


Advertisement