சினிமா

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச்.. ஆனால் வந்ததோ என்ன பார்த்தீர்களா! ஏமாற்றப்பட்ட கைதி இசையமைப்பாளர்! வெளியான ஷாக் தகவல்!!

Summary:

music director sam cs cheated by online company while buying apple watch

தமிழில் புரியாத புதிர், விக்ரம் வேதா, கைதி, அடங்க மறு, அயோக்யா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு மாபெரும் இடத்தை பிடித்தவர் சாம்.சி.எஸ். இவரது பாடலுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஆன்லைனில் பொருள் வாங்கி தான் ஏமாந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், எனது சகோதரனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுக்க ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தேன். அது வந்தபோது அதை திறந்து பார்த்த நாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்தோம்.

அதன் உள்ளே கற்களை மிக அழகாக பேக் செய்து அனுப்பியுள்ளனர். அதுகுறித்து அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் புகார் அளித்த போது அவர்கள் புகாரை நிராகரித்து, எங்களது பணத்தை திருப்பித் தர முடியாது என கூறி விட்டனர். அதனால் தயவு செய்து யாரும் அந்த நிறுவனத்திலிருந்து எதுவும் வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என கடுமையாக தெரிவித்துள்ளார்.


Advertisement