சூப்பர்.. இசையமைப்பாளர் சாம் சி எஸ்க்கு கிடைத்த மாபெரும் கெளரவம்.! குவியும் பாராட்டுக்கள்!!music-director-sam-c-s-win-iifa-award

இந்திய திரையுலக கலைஞர்களை உருவாக்கும் வகையில் கொடுக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஒன்று ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது. இந்த விருது சர்வதேச அளவில் கவர்ந்து பாராட்டுகளை குவிக்கும் ஹிந்தி படங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான விருது பெறும் கலைஞர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி 
சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் ஹிந்தியில் ரீமேக்கான ‘விக்ரம் வேதா’ படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மே மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் துபாய் யெஸ் தீவில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் விழாவில் சாம் சி.எஸ்ஸிற்கு ஐஃபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. 
தமிழில் வெளிவந்த ‘விக்ரம் வேதா’ படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ்ஸிற்கு ப்ரவோக் விருது, ஹலோ எஃப் எம் விருது, விகடன் விருது, விஜய் அவார்ட்ஸ் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.