முகேனை சோகத்தில் ஆழ்த்திய இருகுழந்தைகளின் மரணம். ! கடைசி ஆசையால் வேதனையுடன் அவர் வெளியிட்ட வீடியோ!

முகேனை சோகத்தில் ஆழ்த்திய இருகுழந்தைகளின் மரணம். ! கடைசி ஆசையால் வேதனையுடன் அவர் வெளியிட்ட வீடியோ!


mugen-sad-for-wo-children-dead

 இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனைத்து போட்டியாளர்களிடம் அன்பாக நடந்து கொண்டார்.மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது, பாட்டு பாடி கலகலப்பாக இருப்பது என ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். அதுமட்டுமின்றி முகேன் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பிரபலமானது. 

இந்நிலையில் முகேன் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் சோகமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் இரு துயர சம்பவங்கள் நடந்துள்ளது என்று கூறி சுஜித் மரணம் மற்றும் மலேசியாவை சேர்ந்த சிறுவன் ஒருவரது மரணம் குறித்து பேசியுள்ளார்.

mugen

 மேலும் மலேசியாவைச் சேர்ந்த mohd firdaus என்ற 8வயது சிறுவன் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் உயிருக்கு போராடி படுக்கையில் இருந்த நிலையிலும் முகேன் பாடிய பாடல்களை பாடியுள்ளார். மேலும் முகேனை நேரில் பார்க்க வேண்டும் எனவும் அந்த சிறுவன் ஆசைப்பட்டுள்ளான். இந்நிலையில் இது குறித்து பேசிய முகேன் சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னால் அச்சிறுவனை காண முடியவில்லை அவர்கள் இருவரது ஆத்மாவும் சாந்தியடைய வேண்டும் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.