வணக்கம்! அனைவரும் நலமா? ட்விட்டரில் இணைந்த பிரபல நடிகர்! முதல் புகைப்படத்திற்கே எக்கச்சக்கமாக குவியும் லைக்குகள்!

Ms baskar joined in twitter


ms-baskar-joined-in-twitter

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து தனது திறமையால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் எம் எஸ் பாஸ்கர். நாடகத்துறையில் இருந்து சினிமாவில் களமிறங்கிய அவர் விசு இயக்கிய திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, விஷால் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் எம். எஸ் பாஸ்கர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கங்கா யமுனா சரஸ்வதி, அலைகள், சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ்மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.  மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் உள்ளார்.

இந்நிலையில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். மேலும் வணக்கம். அனைவரும் நலமா? எனக்கேட்டு தனது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து இரண்டாவது டிவிட்டாக தான் பாரதியார் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பூனம்பாஜ்வா, ஸ்ரேயா, அசின் போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் லைக்ஸ் போட்டு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.