சினிமா

வாவ்.. மகள் மேல எவ்ளோ பாசம்!! மிஸ் செய்வதாக எம்.எஸ்.பாஸ்கரின் மகள் வெளியிட்ட வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மத்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். எம்.எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக நடித்து அசத்தி அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டார்.

மேலும் அவரது மகள் ஐஸ்வர்யா. டப்பிங் கலைஞராக உள்ளார். இவர் சினிமாவில் பல ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு தொழிலதிபர் என்.ஏ.சுதாகரின் மகன் அகுல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு எனது அப்பாவை மிஸ் செய்வதாக கூறி எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா தனது அப்பா பாசத்துடன் தனக்கு கால் அமுக்கி விட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அப்பா, மகள் பாசத்திற்கு அளவே இல்லை என பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement