சினிமா

சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி! மிஸ்டர் லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்

Summary:

mr local release date changed

சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களின் இயக்குனர் ராஜேஷ் Mr.லோக்கல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்துவருகிறார்கள்.

ராஜேஷின் படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே இருக்கும் என்பதால் இந்த படமும் நகைச்சுவை சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்றாற்போலவே சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே னால வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய படம்

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாராவின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டு புதிய தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மே 17ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. 


Advertisement