சினிமா

விஜய்யை காப்பியடித்த சிவகார்த்திகேயன்? Mr.லோக்கல் படத்தின் போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்!

Summary:

Mr local first look poster copied from vijay jilla movie

சீமராஜா திரைப்படம் தோல்வியை அடுத்து தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிப்பையும் தாண்டி தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நடிகர் சிவா கனா என்ற படத்தையும் தயாரித்துள்ளார். கனா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றியும் அடைந்தது.

தற்போது சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களின் இயக்குனர் ராஜேஷுடன் Mr . லோக்கல் என்ற படத்தில் நடித்துவருகிறார் சிவா.  இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். ராஜேஷின் படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே இருக்கும் என்பதால் இந்த படமும் நகைச்சுவை சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கும்.

இந்நிலையில் நேற்று மாலை Mr . லோக்கல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கோட்டு ஷூட்டு அணிந்து, கன்னத்தில் கை வைத்தவாறு மற்றொரு கையில் டீ கிளாஸ்சுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் Mr.லோக்கல் படத்தின் போஸ், ஜில்லா படத்தில் விஜய் கொடுத்த போஸை காபி அடித்து தான் எடுத்துள்ளனர் என்று கூறி Mr.லோக்கல் போஸ்ட்டரை விமர்சித்து வருகின்றனர்.

 


Advertisement