
மௌனராகம் 2 ரவீனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மௌனராகம் 2 ரவீனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவ்வாறு கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி குடும்பம், இசை என்ற கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர் மௌன ராகம்.
இந்த தொடரில் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதில் சக்தி கதாபாத்திரத்தில் பேபி கிருத்திகா நடித்ததன் மூலம் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில்பிரபலமானார். இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 873 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.
தற்போது விஜய் தொலைகாட்சியில் மௌன ராகம் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. மௌன ராகம் சீசன் 2 இல் குட்டி பெண்கள் வளர்ந்து, குமரிகளாக மாறிவிட்டதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சக்தி காதபத்திரத்தில் தற்போது நடித்துவருபவர் ரவீனா.
கிராமத்து பெண்ணாக, எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சில எபிசோடுகள் நடிப்பின் மூலமே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார் ரவீனா. தற்போது சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், சமூக வலைத்தளகளில் புகைப்படகள், வீடியோகளை வெளியிட்டு ரசிகர்களை மகிழிச்சிபடுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள சில டப்மாஷ் வீடியோ சில இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
மேலும் மௌன ராகம் சீரியலில் கிராமத்து பெண்ணாக வலம்வரும் இவரின், மிகவும் மாடர்னான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அவரா இது? என வியப்புடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.
Advertisement
Advertisement