இந்த போட்டோவிலுள்ள குட்டிப்பெண் எந்த பிரபலம்ன்னு தெரியுதா.? இப்போவும் அதே அழகு.!



model kenishas wintage photo goes viral

திரையுலகம் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் நபர்களில் கெனிஷா ரவி முக்கியமானவர். ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இவர், அழகு மற்றும் ஸ்டைல் தொடர்பான சமூக வலைதள பதிவுகள் மூலம் அதிக பாலோயர்களை பெற்றுள்ளார்.

kenisha ravi

திரையுலக தகவல் வட்டாரங்களில் கெனிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் காதல் தொடர்ந்து பேசப்பட்ட ஒரு விவகாரம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இருவருக்கும் இடையிலான உறவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட சுற்றுலா புகைப்படங்கள் மூலம் இருவரின் நெருக்கம் பலமுறை ஊடகங்களில் பேசப்பட்டுள்ளது. 

கெனிஷா ரவி தொடர்பான புதிய அப்டேட்கள், குறிப்பாக ஜெயம் ரவியுடன் இணைந்த உறவு குறித்த எதிர்கால அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது கெனிஷா மாடலிங் துறையில் செயல்படுவதுடன் மட்டுமல்லாமல் சமூக வலைதள Influencer ஆகவும் செயல்பட்டு வருகிறார். பெரும்பாலான முக்கிய ஃபேஷன் பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றிவரும் அவர், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

kenisha ravi

இந்நிலையில், கெனிஷாவின் ஒரு அரிதான சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. தெளிவான முகச் சிரிப்புடன், எளிய உடை அணிந்திருக்கும் அந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே இவரின் முகதோற்றம் மற்றும் இயல்பான அழகு மாறாமல் இப்போதும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.