சினிமா

மெர்சல் படம் படைத்த புதிய சாதனை! என்ன தெரியுமா?

Summary:

Mercal movie got new award

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜயின் அசத்தலான நடிப்பால் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் தான் மெர்சல். இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இப்படத்தில் நடிகர் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. 

இந்நிலையில் மெர்சல் படம் வெளியாகி இரண்டு ஆண்டு கடந்த நிலையிலும் தற்போது புதிதாக யூடியூப் புதிய சாதனை படைத்துள்ளது. அது என்னவென்றால் மெர்சல் திரைப்படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் லிரிகள் வீடியோக்கள் 400 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

 


Advertisement