தமிழகம் இந்தியா சினிமா

உல்லாசமாக இருந்துவிட்டு கழட்டிவிட்ட காதலன்! காதலி எடுத்த வித்தியசமான முடிவு! இறுதியில் நடந்த சோகம்!

Summary:

Men drunk poison and suicide in mysoor

பொதுவாக காதலன் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டதாகத்தான் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த சம்பவத்தில் காதலித்து ஏமாற்றிய காதலனின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை காதலி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா மல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் தனிமையில் சந்தித்த இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் அதனை தங்களது தொலைபேசியில் வீடியோ, மற்றும் புகைப்படமாகவும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட செந்தில் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்ளமுடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ, மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

விஷயம் அறிந்த செந்தில் அவமானத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் செந்திலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தலைமறைவாக இருக்கும் காதலியையும் தேடி வருகின்றனர்.


Advertisement