சினிமா

தமிழ் திரையுலக பிரபல நடிகர்களின் மனைவிகள் குறித்து மீரா மிதுன் அவதூறு பேச்சு.. வைரல் வீடியோ!

Summary:

Meera mithun talks about vijay and surya wives

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாடல் நடிகை மீரா மிதுன் சமீபத்தில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார். இதனால் நடிகர்களின் ரசிகர்கள் தன்னை கேவலமாக பேசுவதாகவும் தெரிவித்திருந்தார்.

சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான செய்திகள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன. உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா?

80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. என் மொபைல் போன் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பாவார் என ஏற்கனவே ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகள் குறித்து மிகவும் அவதூறாக பேசியுள்ளார் மீரா மிதுன். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதை கேட்டு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement