சினிமா

கழுத்தில் புது தாலி, நெற்றியில் குங்குமம்! ரகசிய திருமணம் செய்துகொண்டாரா மீரா மிதுன்! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

meera mithun post new photo

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற சில படங்களில் நடித்திருந்தவர்  மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். பின்னர் பணமோசடி வழக்கில் சிக்கி தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் மீராமிதுன் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்றார். பின்னர் குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

meera mithunக்கான பட முடிவுகள்

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் அவர் தொடந்து  பல சர்ச்சைகளில் சிக்கினார். அதனை தொடர்ந்து பல இடங்களில் நடித்து வரும் மீரா மிதுன் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் அவர் திருமணமான கோணத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 


Advertisement