சினிமா

சிவகார்த்திகேயன் மூலம் ரசிகர்களை சந்திக்கும் பிக் பாஸ் பிரபலம் - வெளியான புதிய தகவல்!

Summary:

meera mithun joined in nama veetu mappllai

பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக மாடல் மீராமிதுன் கலந்துகொண்டார். இவர் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.

மேலும் இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்  கடந்த 2015ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் 8ஆவது சீசனில் இவர் கலந்து கொண்டு நடனமாடிய போது, இவர் நடந்து கொண்டது பிடிக்காத நடுவர்கள் இவரை போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளனர். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக மீரா மிதுன் கலந்துகொண்டார். ஆரம்பம் முதலே இவரது நடவடிக்கையால் பிக்பாஸ் வீட்டிற்குள் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. கடையில் இந்த கடந்த வாரம் இறுதியில் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த உடனே தனது மாடலிங் வேலையை மீண்டும் தொடர துவங்கிவிட்டார். அது மட்டுமின்றி தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும், தவறை சுட்டிக்காட்டிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இந்நிலையில் தற்போது புதிய டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் வாழ்த்துக்களுடன் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை சந்திக்க உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் நம்ம வீட்டுப்பிள்ளை.இப்படத்தின் பாஸ்ட் லுக் பாஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.மேலும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


Advertisement