சினிமா

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல அனைத்து திரையுலகிலும், எனக்கு தல தான், தல மட்டும் தான் பிடிக்கும்! இளம் நடிகை ஓபன் டாக்.

Summary:

Meenakashi

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தனது கடின உழைப்பால் உயர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படம் பெண்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு கூறியுள்ளனர்.

மேலும் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சகிகுமார் இயக்கத்தில் வெளியான கென்னடி கிளப் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை மீனாட்சி.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருந்த போது அங்கு இவ்வாறு கூறியுள்ளார். அதாவது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல அனைத்து திரையுலகிலும் எனக்கு தல தான் தல மட்டும் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். 


Advertisement