அட.. மீனா மகள் தெறி பேபி நைனிகாவா இது..? இப்போ எப்படி வளர்ந்துட்டார் பாருங்க.. வைரல் புகைப்படம்..

அட.. மீனா மகள் தெறி பேபி நைனிகாவா இது..? இப்போ எப்படி வளர்ந்துட்டார் பாருங்க.. வைரல் புகைப்படம்..


meena-daughter-nainika-latest-photos

நடிகை மீனா மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இன்றுவரை பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் மீனா. 90 காலகட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்வந்த மீனா திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார்.

இதனிடையே மீனாவின் மகள் நைனிகா விஜய் நடித்த தெறி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். தெறி படத்தில் நைனிகாவின் அழகான, திறமையான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டதோடு படத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

Baby nainika

தெறி படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நைனிகா நடித்திருந்தாலும் தெறி படம் அளவிற்கு அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது தொடர்ந்து தனது படிப்பில் கவனம் செலுத்திவருகிறார் நைனிகா. இந்நிலையில் தெறி படத்தில் குழந்தையாக இருந்த நைனிகா தற்போது சற்று வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.

அவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Baby nainika