சினிமா

மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரபலங்கள்.! மறைமுகமாக வச்சு செய்து மதுமிதா கூறியுள்ளதை பார்த்தீர்களா!!

Summary:

Mathumitha tweet about bigboss contestants who hurting her

பிக்பாஸ் சீசன் மூன்று 105 நாட்களாக விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த போட்டியில் பாடகர் முகேன் ராவ் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சக போட்டியாளர்கள் தன்னை காயப்படுத்தியதாக கூறி தற்கொலைக்கு முயற்சி செய்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின்னர், தனக்கு சம்பள பாக்கியை தருமாறும், இல்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியதாகவும்,விஜய் டிவி சார்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் தான் தற்கொலை முயற்சி செய்ய சாண்டி,  கவின்,  லாஸ்லியா,  அபிராமி, வனிதா, ஷெரின் ஆகியோர்தான் காரணம் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 

 இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அந்த கேங்க் மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர்களை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 


Advertisement