பல்டி மேல் பல்டி! நான் ஆசைபட்டு திருமணம் செய்யல... மிரட்டியதால் தான் திருமணம்! மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!!



mathampatti-rangaraj-joy-griselda-case-controversy

சமீபகாலத்தில் தமிழ் சினிமா மற்றும் சமையல் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய மாதம்பட்டி ரங்கராஜ்–ஜாய் கிரிசில்டா விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவியுள்ள குற்றச்சாட்டுகளும் பதில்களும் இந்த வழக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

வழக்கின் பின்னணி

சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. அண்மையில் தனக்குப் பிள்ளை பிறந்ததாக அறிவித்த ஜாய், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணையத்தின் முன் தன்னை 2வது திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டார்" என்றும், "என் குழந்தையின் தந்தை நான்தான் என ஒப்புக்கொண்டதால் DNA ஆதாரம் தேவையில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: காதல் லீலைகளின் பார்ட் 2 ! மாதம்பட்டி ரங்கராஜின் காதல் வீடியோவை முழுசாக வெளியிட்ட ஜாய் கிரிஸ்ல்டா! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ...

மாதம்பட்டி ரங்கராஜின் மறுப்பு

இந்நிலையில், ரங்கராஜ் தனது தரப்பில் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "மகளிர் ஆணையத்தின் முன் எந்தவிதமான ஒப்புதலையும் நான் அளிக்கவில்லை. ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. அவதூறு செய்வதற்காக ஜாய் என்னை மிரட்டினார். அந்த மிரட்டலின் பேரிலேயே இந்த திருமணம் நடைபெற்றது" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், "2025 செப்டம்பரில் ஆயிரம் விளக்குகள் காவல் நிலையத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் நான் வாக்குமூலம் அளித்துள்ளேன். இந்த திருமணம் மிரட்டல் மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கட்டாயப்படுத்தப்பட்டது என்பதை உறுதியாக கூறியுள்ளேன். ஜாய் மாதத்திற்கு ரூ.1.50 லட்சம் பராமரிப்பு தொகை, மற்றும் BMW கார் EMI ரூ.1.25 லட்சம் வழங்க வேண்டும் என கோரியதும் நான் மறுத்தேன்" என தெரிவித்தார்.

DNA சோதனை குறித்து விளக்கம்

அவர் மேலும் கூறியதாவது: "நான் ஒருபோதும் DNA பரிசோதனையை மறுக்கவில்லை. அந்தக் குழந்தை என்னுடையது என நிரூபிக்கப்பட்டால், அவனை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன். மகளிர் ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். உண்மையை நிரூபிக்க அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு தற்போது சமூக வலைதளங்களிலும், சட்டவழிகளிலும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. உண்மை யாருடைய பக்கம் உள்ளது என்பது வரும் நீதிமன்ற தீர்ப்பில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: சர்ச்சைக்கு நடுவில் மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...