சினிமா

அடேங்கப்பா.. ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் ரீல் மகன்! இப்போ எப்படி வளர்ந்துட்டார் பார்த்தீர்களா! மாஸ் காட்டும் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சில குழந்தைகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சில குழந்தைகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். அவ்வாறு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சேதுபதி படத்தில் அவருக்கு மகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாஸ்டர் ராகவன் முருகன். இந்தப் படத்தில் அவரது பேச்சு மற்றும் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவரந்தது.

மேலும் ராகவன் றெக்க, மாரி 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும்  கொடிகட்டி பறந்த ஐஸ்வர்யாராயுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதாவது நடிகை ஐஸ்வர்யாராய் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

மேலும் அத்திரைப்படத்தில் மாஸ்டர் ராகவன் முருகன் பாண்டிய இளவரசரின் இளம் வயதினராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் ராகவன் ஐஸ்வர்யாராயுடன் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அது பெருமளவில் வைரலாகி வருகிறது


Advertisement