மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட தலயின் வலிமை பட அப்டேட்!! என்ன தெரியுமா? செம குஷியில் தல ரசிகர்கள்!!master-movie-actress-talk-about-valimai-moviw-update

மாஸ்டர் படத்தில் நடித்திருந்த நடிகை சங்கீதா வலிமை படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 60 வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். மேலும் இதில் அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பரவிவந்த கொரோனா  பரவி வந்த நிலையில் அதன்ஷூட்டிங் தடைபட்டது.

அதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். ஆனால் அதுகுறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவராமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் பட நடிகை மூலம் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும், ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் நடிகை சங்கீதா. இவர் வலிமை படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

Valimai

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், வலிமை படம் குறித்து கூறுகையில் எனக்கு வலிமை படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இயக்குனர் வினோத்துடன் பணியாற்றியது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. மேலும் வலிமை படம் 99.9 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதுகுறித்த அப்டேட் கூடிய விரைவில் வரும் என கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.