விஜயின் மாஸ்டர் படத்தின் தற்போதைய நிலை பற்றி விஜய் டிவி பிரபலம் தீனா பதிவிட்ட ட்விட்டர் பதிவு!



Master deena

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும்  படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

 இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

master

இப்படத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் அனைத்தும் வேலைகளும் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஏப்ரல் 9 விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. 

இப்படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. அதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் தங்களது டப்பிங் வேலையை முடித்து விட்ட நிலையில் விஜய் டிவியின் புகழ் தீனா இப்படத்தில் நடித்துள்ளதால் அவரும் தனது டப்பிங் வேலை செய்து வருவதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.