கைதி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர்தானாம்! யார் தெரியுமா?

கைதி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர்தானாம்! யார் தெரியுமா?



Mansoor Ali Khan is the first choice to act in kaithi movie

மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹீரோயின் இல்லை, மேலும், ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்சன் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

kaithi

மேலும், படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து ஒரு சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதாவது, கைதி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானாம்.

அவரை மனதில் வைத்துதான் இந்த கதையை இயக்குனர் தயார் செய்தாராம். பின்னர் கதையில் சில மாற்றங்களை செய்து அதன்பின்னர் கார்த்தியை நடிக்க வைத்தாராம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

kaithi