மீண்டும் குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த முக்கிய பிரபலம்.! ஆனா கோமாளியாக இல்லை.! ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!!

மீண்டும் குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த முக்கிய பிரபலம்.! ஆனா கோமாளியாக இல்லை.! ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!!


manimegalai-re-entry-in-cook-with-comali-as-host

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு மக்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. மக்களால் பெருமளவில் ரசிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் பலர். அந்த வரிசையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மணிமேகலை. அவர் நிகழ்ச்சியில் விதவிதமான கெட்டப்பில் வந்து பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். ரசிகர்களின் ஃபேவரைட் கோமாளியாக இருந்த அவர் திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு கர்ப்பமாக இருக்கிறார், படத்தில் நடிக்கிறார் என பல காரணங்கள் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் கோமாளியாக பங்கேற்கவில்லை. தொகுப்பாளினியாக நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இதில் ரக்ஷனுடன் இணைந்து மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ப்ரமோ வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.