ஒரு செல்பிக்கு போஸ் கொடுத்தது ஒரு குத்தம்மா..! கணவரை மேனர்ஸ் இல்லையா என்ற கேள்வி கேட்ட தொகுப்பாளினி மணிமேகலை!

ஒரு செல்பிக்கு போஸ் கொடுத்தது ஒரு குத்தம்மா..! கணவரை மேனர்ஸ் இல்லையா என்ற கேள்வி கேட்ட தொகுப்பாளினி மணிமேகலை!


Manimagalai

சன் மியூசிக்கில்  பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார்.

ஆனால் அவர்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதிக்காத நிலையில் அவர்களை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

Manimagalai

விஜே மணிமேகலை திருமணத்திற்கு பிறகும் தனது தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த அலப்பறைகளையும், குழந்தை தனமான செயலையும் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் எப்போது வித்தியாசமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகி வருகிறார். அதே போல் தற்போது தனது கணவருடன் செல்பி எடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் தனது கணவரை பார்த்து ஒரு பெண்ணு செல்பி எடுக்கும் போது குறுக்க வரக்கூடாது என்ற மேனர்ஸ் இல்லையா என கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.