பிரபல இசைக்கலைஞர் திடீர் மரணம்! சோகத்தில் டி இமான் வெளியிட்ட உருக்கமான பதிவு!

பிரபல இசைக்கலைஞர் திடீர் மரணம்! சோகத்தில் டி இமான் வெளியிட்ட உருக்கமான பதிவு!



Mandolin music player Prakash hariharan dead

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இதனால் பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில் சமீப காலமாகவே சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் அடுத்தடுத்து பல உயிரிழப்புகள் நேர்ந்து வருகிறது. நடிகர்,  நடிகை, இயக்குனர் என தொடர்ந்து பல துக்க செய்திகள் வந்துள்ளது. மேலும் சமீபத்தில் கூட இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய, ஜீவி பிரகாஷ் நடிப்பில் 4ஜி என்ற படத்தை இயக்கிய அருண் பிரசாத்  என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது  திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து தற்போது பிரபல இசை அமைப்பாளரான டி இமானின் பல பாடல்களுக்கு இசையமைத்த மாண்டலின் இசைக்கலைஞர் பிரகாஷ் ஹரிஹரன் என்பவர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்துள்ளார். இந்நிலையில் இத்தகைய அதிர்ச்சி செய்தியை டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மிகவும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.