நடிகர் விவேக்கின் கனவை நினைவாக்க மாநாடு படக்குழுவினர் செய்த நல்ல காரியம்..! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா.!manadu movie team plant tree

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். இது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் அவரது அரிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

மறைந்த அப்துல் கலாம் மீது அதிக பற்று வைத்திருந்த விவேக், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். அவர் இதுவரை தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சுமார் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டார். 

Maanadu

மீதமுள்ள மரக்கன்றுகளை நடுவதற்குள் நடிகர் விவேக் காலமாகிவிட்டார். அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாக பிரபலங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் மரக்கன்றுகளை நட்டுவைத்து வருகின்றனர். அந்த வகையில் சிம்பு நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னர் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.