சினிமா

மனுஷன் படப்பிடிப்பு தளத்தில் எங்க படுத்து தூங்குறாரு பாருங்க!! வைரலாகும் சிம்புவின் புகைப்படம்!!

Summary:

படப்பிடிப்பில் கட்டாந்தரையில் படுத்து தூங்கும் நடிகர் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைர

படப்பிடிப்பில் கட்டாந்தரையில் படுத்து தூங்கும் நடிகர் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உள்பட பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டநிலையில், விரைவில் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் நடைபெற இருப்பதாகவும், விரைவில் படம் திரையில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பின் போது, படப்பிடிப்புக்கு நடுவே அங்கிருக்கும் மண்தரையில் படுத்து ஓய்வு எடுக்கும் நடிகர் சிம்புவின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

ஒருசில படங்களில் நடித்த ஹீரோக்கள் கூட கேரவனில்தான் அமர்வேன் என அடம்பிடிக்க, சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்புவின் இந்த எளிமையை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் சிம்பு கட்டாந்தரையில் படுத்திருக்கும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, "நடிகர்களின் வாழ்க்கை.. மேன் ஆப் சிம்ப்ளிசிட்டி (எளிமையான மனிதன்)" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement