சினிமா

இது காதலா? இல்லை...பிக்பாஸ் நிகழ்ச்சியை மோசமாக கழுவி ஊற்றிய பிரபலம்!! கமலையும்தான்.!

Summary:

mamathi sarai talk about bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு. 

இதனைத்தொடர்ந்து 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். மேலும் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் வனிதா விஜயகுமார், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன்,மதுமிதா ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

bigg boss season 3 house க்கான பட முடிவு

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. 

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு, பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட மமதி சாரி தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர், பிக்பாஸ் சீசன் 3ல் கவின் 4 பெண்களுடனும் மிகவும் நெருக்கமாக உள்ளார். மேலும் நான்கு பெண்களையும் காதலிப்பதாகவும் ஆசை வார்த்தை பேசி வருகிறார். இதனை மக்கள்  பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதெல்லாம் காதல் இல்லை வெறும் செக்ஸ் மட்டுமே என கூறியுள்ளார்.

mamathi saari க்கான பட முடிவு

மேலும் கமல் குறித்து கேட்டபோது நாம் யாராவது தமிழ் பேசினால் அவர் கொண்டால் செய்வார். ஆனால் அவரே தமிழ் வார்த்தைகளை தேடி தேடிதான் பேசுகிறார். அவர் நான் தமிழில் பேசும்போது மிகவும் நக்கல் செய்தார் எனவும் தயங்காமல் பதில் அளித்துள்ளார் 


Advertisement