கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் திடீர் மரணம்! கண்ணீர் விடும் ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் திடீர் மரணம்! கண்ணீர் விடும் ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!!


malayala bigboss contestant died by corono

பிரபல மலையாள பாடகரும், பிக்பாஸ் இரண்டாவது சீசன் போட்டியாளருமான சோமதாஸ்  நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம்  அடைந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருக்கும் சாத்தனூரை சேர்ந்தவர் சோமதாஸ். இவர் மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்த நிலையில் 42 வயது நிறைந்த சோமதாஸுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் கொல்லம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

somadas

இந்த நிலையில் அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சோமதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.