பூட்டான் நாட்டில் சுற்றி வரும் மாளவிகா மோகனன்.? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சர்யம்.!?

பூட்டான் நாட்டில் சுற்றி வரும் மாளவிகா மோகனன்.? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சர்யம்.!?



malavika-went-to-pootan-country-photos-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். மலையாளத்தில் பிரபலமான நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

malavika

இப்படத்திற்கு பின்பு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும், தனுஷ் நடிப்பில் மாறன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார். ஆனால் இந்த இரு திரைப்படங்களும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனால் சில காலமாக மாளவிகா மோகனிற்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் வராமல் இருந்தது.

இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. மேலும் ஏப்ரல் மாதம் தங்கலான் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

malavika

இது போன்ற நிலையில் திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். தற்போது பூட்டான் நாட்டிற்கு சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன் அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.