"குளக்கரையில் வித்யாசமான போட்டோசூட் செய்த மாளவிகா மோகனன்!" லேட்டஸ்ட் போட்டோஷூட்!

"குளக்கரையில் வித்யாசமான போட்டோசூட் செய்த மாளவிகா மோகனன்!" லேட்டஸ்ட் போட்டோஷூட்!



malavika-mohanan-viral-photos

ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனனின் மகள் மாளவிகா மோகனன். இவர் 2013ம் ஆண்டு "பட்டம் போலே" என்ற மலையாள படத்தில் தான் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா.

malavika

இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த "பேட்ட" படத்தில் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து குரு, மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கடைசியாக விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "தங்கலான்" படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் மாளவிகா இதன் மூலம் தமிழில் ஒரு நல்ல ரவுண்ட் வரமுடியும் என்ற கனவில் இருக்கிறார்.

malavika

இந்நிலையில் மும்பையில் வசிக்கும் இவர், தற்போது உறவினரின் திருமணத்திற்காக சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு குளக்கரையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.