சேலையில் குடும்ப குத்துவிளக்காக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்..

சேலையில் குடும்ப குத்துவிளக்காக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்..



Malavika mohanan photos viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

malavika

தமிழில் மாஸ்டர், பேட்ட, மாறன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் மாளவிகா மோகனின் கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது.

malavika

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற சேலையில் குடும்ப குத்து விளக்காக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.