ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
மாளவிகா மோகனனிற்கும், இயக்குநர் பா ரஞ்சித்திற்கும் இப்படியொரு தொடர்பா.?
தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் மோகனின் மகளான இவர், 2013ம் ஆண்டு "பட்டம் போலே" என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து 2019ம் ஆண்டு பேட்ட, 2021ம் ஆண்டு மாஸ்டர் என இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தனுஷுடன் "மாறன்" படத்தில் நடித்தார். இதையடுத்து தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் "தங்கலான்" படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பா. ரஞ்சித்தின் பிறந்தநாளில் தனது ட்விட்டர் பக்கத்தில் மாளவிகா ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், "எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. சில படங்கள் ஜாலியாகவும், சில படங்கள் கடினமாகவும் இருக்கும். என்னை மாற்றிய படம் என்றால் "தங்கலான்" என்று சொல்வேன்.
என்னை இந்த அளவிற்கு மாற்றியது இந்த படம் தான். இந்தப் படத்தை இயக்கியவர் தான் என்று எனக்கு புரிந்தது. அவரைப் பற்றி உணர்ச்சி வசப்படாமல் என்னால் பேச முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இவர் எப்போதும் தான் கூறியபடியே நடப்பார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஞ்சித்" என்று பதிவிட்டுள்ளார்.