சினிமா

அடேங்கப்பா.. என்னா ஸ்டைலு! ராயல் என்பீல்டு பைக்கில் செம கெத்து காட்டும் மாஸ்டர் பட நடிகை!!

Summary:

நடிகை மாளவிகா மோகனன் ராயல் என்ஃபீல்டு பைக்கில் செம கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்

நடிகை மாளவிகா மோகனன் ராயல் என்ஃபீல்டு பைக்கில் செம கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து அவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் மாளவிகா தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். இந்நிலையில் அவர் தற்போது ராயல் என்ஃபீல்டு பைக்கில் செம கெத்தாக, ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி லைக்குகளை குவித்து வருகிறது.


Advertisement