பிரபல நடிகை திடீர் மாரடைப்பால் மரணம்! திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்!!

பிரபல நடிகை திடீர் மாரடைப்பால் மரணம்! திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்!!


Malaiyala actress ambika rav passed away

கடந்த 2002 ஆம் ஆண்டு பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் வெளிவந்த  ‘கிருஷ்ண கோபாலகிருஷ்ணா’ என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் அம்பிகா ராவ். அதனை தொடர்ந்து அவர் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த ராஜமாணிக்யம், தொம்மனும் மக்களும், வெள்ளினக்ஷத்திரம் போன்ற பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் நடிகையாக களமிறங்கி மீஷா மாதவன், சால்ட் அண்ட் பெப்பர், அனுராகா காரிக்கின் வெல்லம், தமாஷா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கும்பலாங்கி நைட்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் அம்பிகா ராவ் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

dead

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த அம்பிகா ராவ் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.